“இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது திட்டமிட்டு நடத்தப்படும் செயல்” என்று இயக்குனர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடபோவது இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும், அந்த கட்சியை தோற்கடிப்போம். அதே நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதுதான் எங்களது நிலைபாடு. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகிறார்கள். இது திட்டமிட்டு நடத்தப்படும் செயல். கூட்டு ரோந்து என்று இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவது வேடிக்கையான ஒன்று. தமிழக மீனவர்களை தாக்குபவர்களுடன் சேர்ந்து கூட்டு ரோந்து நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல்.
இலங்கை கடற்படையுடன் சீன கடற்படையும் சேர்ந்து தமிழக மீனவர்களை தாக்குகிறார்கள். இதனை அவர்களால் மறுக்க முடியவில்லை. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலுக்கு முன்பு ஆதர்ஸ் மற்றும் காமன்வெல்த் ஊழல் நடந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மட்டும் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் அரசு ஆ.ராசாவை மட்டும் கைது செய்தது தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கவா? ஆதர்சை விட பெரிய ஊழல் காமன்வெல்த், இதை விட பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் எனவே ஒரு ஊழலை மறைக்க அதை விட பெரிய ஊழலை காட்டுகிறார்கள்.
இது காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட செயல் போன்றே தெரிகிறது. முதுமலை காட்டில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும். புலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்..
ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!
ரஜினி குடும்பத்தாருக்கு வாரண்ட்? -பிரச்சனை முடிவுக்கு வந்தது
இந்திய அழகி சிந்தூரா நடிக்கும் திகில் படம்
விவேக்கின் சங்கீத ஞானம் பாட்டியின் வட்டி தொழிலால் வந்தது

No comments:
Post a Comment