தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மார்ச் 30-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் 3. முதலில் தமிழில் மட்டும் தயாரான இந்தப் படம் தனுஷ் பாடிய பாடல் பெற்ற புகழால் பின்னர் மூன்று மொழிகளிலும் தயாரானது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தெலுங்கில் டப்பிங்க் செய்யப்பட்டுள்ளதால் தெலுங்கில் இசை வெளியீட்டு விழா நேற்று(21.03.12) ஹைதராபாத்தில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஸ்ருதி, ஐஷ்வர்யா தனுஷ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் ராணா, ராஜசேகர், ராமநாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இசைவெளியீட்டு விழாவில் பேசிய போது ஸ்ருதி “என்னையும் தனுஷையும் சேர்த்து வைத்து பேசி வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வதந்திகள் தான். நானும் அவரும் நல்ல நண்பர்கள். இதே போல் நடிகர் சித்தார்த்துடன் என்னை சம்பந்தப்படுத்தி வந்த தகவல்களும் போய்யானவையே. எனக்கும் அவருக்கும் தொழில் ரீதியான நட்பு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று விலாவாரியாக கூறியிருக்கிறார்.
அதன் பின் தனுஷும், ஸ்ருதிஹாசனும் இணைந்து(பாடலுக்காக) 3 படத்தில் உள்ள ”கண்ணழகா காலழகா” பாடலை மூன்று மொழிகளிலும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த தெலுங்கு நடிகர் ராணா ஸ்ருதியின் நண்பர். நிகழ்ச்சிக்கு வந்ததற்காக ஸ்ருதி ராணாவிற்கு ட்விட்டர் வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
shruthi i like you very much............
ReplyDelete