ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ நேற்று குமரி
மாவட்டம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்ட அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த
27-ந் தேதி நடந்த மாவீரர்
நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர்
மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான
விமர்சனம். அந்த விமர்சனத்தை நான்
தொடர்ந்து செய்வேன். காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில்
பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி,
தமிழ் இனத்தை அழித்த இலங்கை
அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர்
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து
தெரிவித்துள்ளார். இன்னொரு நாட்டில் நடைபெறும்
தேர்தலில் இன்னார் வெற்றி பெற
வேண்டும் என்று நமது நாட்டின்
எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர
மோடி, பிரதமர் பதவியின் தரத்தை
தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில்
நான் உறுதியாக இருக்கிறேன்.
இப்படி
வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட
நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி
அவர். சுப்பிரமணியசுவாமி, ராஜபக்சேவுக்கு இந்திய நாட்டின் உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது
வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படியே
போனால் காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் விருது
கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் போலிருக்கிறது.
இப்படி பேசுவதை பா.ஜனதா
தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள்
யாரும் கண்டிக்கவில்லை.
தமிழக பா.ஜனதா தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன், அது சுப்பிரமணியசுவாமியின் கருத்து சுதந்திரம்
என்கிறார். அப்படி என்றால் அவரது
பேச்சை தமிழிசை சவுந்தரராஜன் நியாயப்படுத்துகிறாரா?
இன்னொருவர்
காரைக்குடியைச் சேர்ந்தவர், பா.ஜனதா கட்சியின்
தேசிய செயலாளரான ராஜா. அவர் நேற்று
கூறியிருக்கிறார். வைகோ இப்படியே பேசிக்கொண்டிருந்தால்
தமிழகத்தில் எங்கும் பாதுகாப்பாக போக
முடியாது. எனவே அவர் தனது
நாவையும், வாயையும் அடக்க வேண்டும். இல்லையென்றால்
பா.ஜனதா தொண்டர்கள் அடக்குவார்கள்
என்று கூறியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள
ம.தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரம்
அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்த
முயன்றனர். இதையறிந்த நான் யாரும் போராட்டம்
நடத்தவோ, உருவ பொம்மைகளை எரிக்கவோ
கூடாது என்றும், அப்படி செய்தால் நடவடிக்கை
எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளேன்.
காங்கிரஸ்
கட்சி தலைவர்கள், பிரதமர்கள், எம்.ஜி.ஆர்.,
தி.மு.க. தலைவர்
கருணாநிதி போன்ற தலைவர்களை நான்
விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் காங்கிரஸ்
கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிரட்டிப்பார்த்ததும் இல்லை. அ.தி.மு.க.
தோழர்கள் ஆத்திரப்பட்டது இல்லை. தி.மு.க. தோழர்கள் தங்களது
தலைவரை எப்படி பேசலாம் என்று
ஆத்திரப்பட்டதில்லை. பாசிச மனப்பான்மையோடு பா.ஜனதா கட்சியினர் என்னை
விமர்சனம் செய்து வருகிறார்கள். இது
திட்டமிட்ட ஒரு நோக்கத்துக்காக செய்யப்படுகிறது.
எதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
எனவே தகுதியில்லாதவர்களை கண்டித்தோ, எதிர்த்தோ உருவ பொம்மைகளை எரிக்கவோ,
போராட்டத்தில் ஈடுபடவோ வேண்டாம் என்று
எனது கட்சியினரை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
பா.ஜனதா தேசிய செயலாளர்
ராஜா வீட்டை ம.தி.மு.க.வினர்
முற்றுகை செய்யப்போவதாக அறிகிறேன். எனவே, ம.தி.மு.க. வினரை
கைது செய்ய வேண்டும். இல்லை
என்றால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
கோர்ட்டு வழங்கிய ஜாமீன் மனுவை
ரத்து செய்ய மனு தாக்கல்
செய்வேன் என்று சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு சுப்பிரமணியசுவாமியின் பாக்கெட்டிலா உள்ளது? ஜெயலலிதாவுக்கும், இந்த
பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க.
அரசை இவர் எப்படி மிரட்டலாம்?
பா.ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி
ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் நான் பழகியிருக்கிறேன். அவர்களது
கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம்கூட மோடியிடம்
இல்லை. பா.ஜனதா கூட்டணியில்
சேரவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன்,
மோகன்ராஜுலு, தமிழக பொறுப்பாளர் முரளீதரராவ்
ஆகியோர் என்னை சந்தித்து கேட்டுக்கொண்டனர்.
அப்போது அவர்களிடமும் சரி, மோடியை சந்தித்து
பேசியபோதும் சரி ஈழத்தமிழர் பிரச்சினையில்
வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறை இருக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். என்னை
விமர்சித்தவர்களை கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்களும்,
அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு
வைகோ கூறினார்.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment