பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
அரசு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற
தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி
வருகிறது. அந்தவகையில் கருப்பு பண விவகாரம்,
பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு தனது
நிலைப்பாட்டை மாற்றி வருவதாக காங்கிரஸ்
கட்சி கூறி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசை விமர்சிப்பதற்காக
காங்கிரஸ் கட்சி சார்பில் ‘டுவிட்டரில்’
புதிய தளம் ஒன்று தொடங்கப்பட்டு
உள்ளது. ‘பல்டி அரசு’ என்ற
பொருளில் தொடங்கப்பட்டுள்ள ‘யு–டர்ன் சர்க்கார்’
என்ற இணையதளத்தில், முதல் தகவலாக கருப்பு
பண விவகாரம் பகிரப்பட்டது.
இந்த தளத்தின் முகப்பில் ‘பல்டி அரசு; 6 மாதம்
நிறைவு’ என்ற வாக்கியம் போடப்பட்டு
உள்ளது. இதில், மத்திய பா.ஜனதா அரசு ஒவ்வொரு
வாரமும் சராசரியாக ஒரு விஷயத்தில் பல்டி
அடிப்பதாக, காங்கிரஸ் தலைவர் டுவீட் செய்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment