தஞ்சாவூரில்
நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய செயலாளர்
எச்.ராஜா, மோடியை வைகோ
விமர்சிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப
முடியாது என்று கூறினார்.
எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி
தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பா.ஜ.க. தேசிய
செயலாளர் எச்.ராஜா தஞ்சை
மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த
பிறகு வைகோ தொடர்ந்து பா.ஜனதா தலைமையை எதிர்த்து
வருகிறார். பிரதமர் மோடியையும், உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஒருமையில் விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனடியாக
நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரோடு சேர்ந்து தமிழருவி
மணியனும் பேசி வருகிறார்.
இலங்கை
கோர்ட்டில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமர்
மோடி இந்த விஷயத்தில் தலையிட்டு
அவர்களை விடுதலை பெற செய்துள்ளார்.
தமிழக மீனவர்கள் விடுதலையானதற்கு கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியை வெகுவாக
பாராட்டியுள்ளனர். ஆனால் இதை நாடகம்
என்று வைகோ கூறுகிறார்.
நாங்கள்
இதுவரை வைகோவை மரியாதையுடன் பேசி
வருகிறோம். விமர்சிக்கும் போது கூட நாகரீகமாக
விமர்சிக்கிறோம்.
இவ்வாறு
அவர் கூறினார்.
பாரதீய
ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு
உறுப்பினர் இல.கணேசன் நேற்று
ஆம்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மத்தியில் ஆளும் நரேந்திர மோடி
தலைமையிலான பாரதீய ஜனதா அரசு
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும்
வரையில் இலங்கை கடல் எல்லைக்கு
சென்று மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என
மீனவர்கள் சபதம் மேற்கொண்டால் இலங்கை
கடற்படையினரால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
தமிழக பா.ஜ.க.
கூட்டணியில் இருந்து வைகோ தானாகவே
வெளியேற வேண்டுமென சுப்பிரமணியசுவாமி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
எதிர்க்கட்சிகளே கூட பிரதமர் நரேந்திர
மோடியை விமர்சிக்க தயக்கம் காட்டுகின்றனர். கூட்டணி
கட்சிகள் விமர்சிக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால்
கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சிப்பதை
மக்கள் விரும்பமாட்டார்கள்.
இவ்வாறு
அவர் கூறினார்.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment