இந்த தீபாவளிக்குதான் முன்னணி கதாநாயகர்களான கமல், ( ரஜினி காந்துக்கு எந்திரன் ஓடிக்கொண்டு இருப்பதால் அவரை கணக்கில் கொள்ள வேண்டாம் ),விஜய், அஜித்,விக்ரம், சூர்யா ஆகியோர்களின் திரைப்படங்கள் வெளிவர வில்லை .
சரி இன்னும் தீபாவளிக்கு வெளிவரும் படங்களை பற்றி கொஞ்சம் அலசலாமா..
1 . உந்தமபுத்திரன்
தனுஷ் - ஜெனிலா ஜோடியாக நடிக்கும் இந்தப்படம் காதலும் அதிரடி சண்டை கட்சிகளும் நிறைந்தது .
கதை
தனுஷ் , ஜெனிலாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு தனுஷின் பெற்றோர்கள் ஆதரவு தெரிவிப்பதுடன் தனுஷ் ஜெனிலியா காதல் வெற்றியடைய கவனமாக காய் நகர்த்துகிறார்கள் . ( ஒருவேளை ஐஸ்வர்யா ரஜினி மாதிரி பெரிய இடது பொண்ணா இருக்குமோ ) இறுதியில் எப்படி இருவரும் சேர்ந்தார்கள் என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை மித்ரன் ஆர் . ஜவகர் இயக்கியுள்ளார்.(இவர் தனுஷ்-நயன்தார நடித்த 'யாரடி நீ மோகினி' படத்தை இயக்கியவர்) மோகன் அப்பாராவ் மற்றும் டி . ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் .எந்திரனோடு போட்டி போடா போறாரா அல்லது மாமாவோட ரசிகர்கள்நம்ம படைத்தும் பார்க்க மாடாங்கலானு நினைகிறாரானு தெரியல்ல .
2 . வல்லக்கோட்டை
அர்ஜூன் - ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இது 'மாயாவி' என்ற மலையாள படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது .
கதை
ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு செல்லும் அர்ஜூன் அங்கே தன்னுடன் இருக்கும் சக கைதியுடன் நண்பரகிறான் ஜெயிலில் இருந்து வெளிவரும் அர்ஜூன் நண்பரின் குடும்பத்துக்கு உதவும் பொருட்டு 'வல்லக்கோட்டை' என்ற கிராமத்துக்கு செல்கிறார் அங்கே சென்றதும் தனது நண்பனின் குடும்பம் பெரிய ஒரு ஆபத்தில் சிக்கி இருப்பது தெரிந்து அவர்களை அதிலிருந்து தனது நண்பனின் குடும்பத்தை எவ்வாறு காப்பாத்துகிறார் என்பதே கதைஇந்த படத்தை டி.டி. ராஜா தயாரித்து இருக்கிறார் . தினா இசையமைத்துள்ளார்.
3 . வ ( குவாட்டர் கட்டிங்)
சிவா- லேகா வாசிங்க்டன் ஜோடியாக நடித்துள்ளனர். புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளார்.
கதை
இந்து ஒரு இரவில் நடக்கும் கதை .சிவா, சவுதி அரேபியா செல்வதற்காக சென்னை வருகிறார் . அங்கே சிவாவும் அவருடைய அக்காள் கணவருமான சரனுமாக ஒரு இரவில் சிலரை சந்திக்கிறார்கள் அதன் பிறகு அதனனல் ஏற்படும் விழைவுகளை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் .எஸ்.சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தை தயாநிதி அழகிரி வெளியிடுகிறார்.
(சரிப்பா .. தமிழ்ல பேர் வச்சா தானே வரி சலுகை கிடைக்கும் ஆனா இந்த படத்தோட பேரு தமிழ்பேர் மாதிரி தெரியல்லையே ..)
4 . மைனா
புது கதாநாயகன் விதார்துடன் , 'சிந்துசமவெளி' கதாநாயகி அமலா பால் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே 'கொக்கி' 'லீ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.மைனா முழுக்க முழுக்க காட்டிலேயே படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கதை
விதர்த் - அமலா பால் இருவரும் சிறு வயது முதல் சிநேகமாக இருப்பவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இவர்கள் பெரியவர்களானதும் வழக்கம் போல காதலாக மாறுகிறது.இந்த காதலால் ஏற்ப்படும் விழைவுகளே கதை.ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ( இவருடைய 'ஜெட் ஜெயிண்ட் மூவீஸ் பெயரை மட்டுமே பயன் படுத்த அனுமதி கொடுத்துள்ளார் அதற்கே 12 % கமிசனாம்.) ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
5 . சித்திர பூவே
புதுமுகங்கள் சந்தீப் - தாமரை ஜோடியாக நடித்துள்ளனர்.
கதை
சிசு கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் இது சிசு கொலையின் கொடூர முகத்தை ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளது.கலை முருகன் என்ற புதியவர் கதை, திரைக்கதை , வசனம் எழுதி , இசையும் அமைத்துள்ளார்.
இந்த 5 படங்களில் எந்த படம் எந்திரன் சுனாமியில் தாக்கு பிடிகிறது அல்லது எல்லாமே ஓடி விடுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
// சிசு கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் //
ReplyDeleteபடத்தை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லையே...