Wednesday, November 3, 2010
நடிகர்களுக்கு போட்டியாக பிரதருக்கும் 'டூப் ' (சுட சுட செய்திகள்)
டெல்லியில் நேற்று காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது . அதில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
சோனியா காந்தி ஏற்கனவே வந்து பிரதமருக்காக காத்திருந்தார். கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் பிரதமருக்காக காத்திருந்தனர். . அப்போது பிரதமர் உள்ளே நுழைந்ததும் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். கமிட்டி உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் பிரதமர் அமர்ந்ததும் சோனியா காந்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரே அதிர்ச்சி 'என்னடா இது நமக்கு தெரியாமலே காங்கிரஸ் கட்சியில இவ்ளோ பெரிய கருத்து வேறுபாடா ' என்று அப்போது ஒரு பத்திரிக்கையாளர் பிரதமர் அருகில் சென்று ' உங்களுக்கு கட்சி தலைவர் அருகில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ' என்றார் . அப்போது அவர் பதில் பேச துவங்கியதும் தான் தெரிந்தது அது பிரதமர் இல்லை பிரதமரை போன்று தோற்றம் கொண்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குர்மித் சிங் சேத்தி என்று . அவர் பிரதமரை போன்று தோற்றத்துடனும் வழக்கமாக மன்மோகன் சிங் அணிவது போன்று வெள்ளை நிற பைஜாமா - குர்தா மற்றும் நீல நிற டர்பன் ( சீக்கிய தலைப்பாகை ) ஆகியவற்றை அணிந்து இருந்தார் அதனால் சோனியா உட்ப்பட அனைவரும் பிரதமர் என நினைத்து ஏமாந்ததொடு உண்மை அறிந்ததும் ஆச்சரியப்பட்டனர் .
அட , பிரதமருக்கும் ' டூப் ' போடா ஆளு வந்தாச்சுங்கோ....
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment