செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பூபதி. இவர் ஆலம்பூண்டியில் உள்ள செஞ்சி தொகுதி ஓட்டுகளை எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
பூபதி அந்தபணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி தலைமையை பாராட்டி பேசியதாக தேர்தல் பார்வையாளர் பிரமோத்சிங் மாண்டேயிடம் செஞ்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செஞ்சி சிவா புகார் கூறினார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, புகார் செய்யப்பட்ட பூபதியை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜிடம் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவாவை ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அந்த வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி நியமிக்கப்பட்டார்.

No comments:
Post a Comment