விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள திரைப்படம் 'தெய்வத்திருமகன்'. இப்படத்தை மதராசப்பட்டினம் விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். மோகன் நடராஜன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள டிரேட் சென்டரில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அவ்விழா பற்றிய சில துளிகள்.
* இப்படத்தின் இசை வெளீயிட்டு விழா அழைப்பிதழ் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் விக்ரம் பாத்திரம் மனதளவில் சின்ன வயது பையனாக இருப்பதால், விக்ரம், அனுஷ்கா, அமலா பால், நாசர், சந்தானம் மற்றும் படத்தில் பணியாற்றிய முக்கிய நபர்களின் சின்ன வயது புகைப்படங்களை வைத்து அதை தயாரித்திருந்தனர்.
* இசை வெளியீட்டு விழாவிற்கு வருபவர்களுக்கு பலூன்கள், பஞ்சு மிட்டாய் என வழங்கினார்கள். இசை வெளியீட்டு விழா நடைபெறும் அரங்கிற்கு செல்லும் வழியில் குழந்தைகளை கவரும் விதமாக அரங்கு அமைத்து இருந்தார்கள்.
* விழாவை ரம்யா தொகுத்து வழங்கினார். அரங்கினுள் மேஜிக் ஷோ நடைபெற்றது.
* பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் மேடையில் தோன்றி தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
* ஒவ்வொரு பாடலையும் திரையுலகைச் சேர்ந்த இருவர் மேடையேறி வெளியிட, அதன்பின் லைவ்வாக அப்பாடலை இசை அமைத்து பாடினார்கள்.
* விக்ரம் பாடியுள்ள "பா பா பாப்பா" என்ற பாடலும், "விழிகளிலே" என்ற பாடலும் திரையிட்டு காட்டினார்கள். "விழிகளிலே" என்ற பாடலில் நீரவ் ஷாவின் உழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
* இறுதியாக இராம.நாராயணன் இசைத்தட்டை வெளியிட, அதனை இயக்குனர் ப்ரியதர்ஷன் பெற்றுக் கொண்டார்.
* மே 22ம் தேதி தெய்வத்திருமகன் வெளியாக இருக்கிறது என்கிறது படக்குழு.

No comments:
Post a Comment