சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக, விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளர் அசான்ஜே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர்,
சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடத் தயார். இந்திய பட்டியலில் இருப்பவர்களை அடையாளம் காண முடியாது என்று இந்தியர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் ஜெர்மனியை போல இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. மற்ற நாடுகளை விட இந்திய அரசுக்குத்தான் மிகப்பெரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதால் கருப்பு பண விவகாரத்தில் இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment