கூடங்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாக மூடக்கோரி மார்ச் 15-ல் ’கூடங்குளம் சலோ’ எனும் பெயரில் கூடங்குளத்தை நோக்கி நாடு தழுவிய பேரணி நடத்தப் போவதாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் பேரணியில் நாடு முழுவதிலும் உள்ள அணுஉலை எதிர்ப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அணுஉலை மீதான மக்களின் அச்சங்களும், கவலைகளும் நீக்கப்படும் வரை, கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்பதே இந்தப் பேரணியின் நோக்கம் என அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment