கொல்கத்தாவின் கிதர்பூர் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஒருவரை அடித்த முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் ஆகாஷ் பானர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவத்து விதிகளை மீறி தவறான பாதையில் வந்த ஆகாஷின் காரை, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் மறித்து நிறுத்தியுள்ளார்.
உடனே காரிலிருந்து இறங்கிவந்த ஆகாஷும், அவருடன் வந்த இருவரும் அந்த போலீஸ்காரரை தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் ஆகாஷ் மற்றும் அவருடன் வந்த இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆனால் ஆகாஷ், முதல்வர் மம்தாவின் மருமகன் எனத் தெரிந்ததும் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் அவர்கள் மூவரையும் விடுவித்துள்ளனர்.
அதன்பின்னர் உள்ளூர் ஊடகங்கள் இதுகுறித்து செய்தி வெளியிட்டு விஷயத்தை அம்பலப்படுத்தியதால், ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment