தமிழக தேர்தலுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 11 ம் தேதி மாலையில் பிரச்சாரம் ஓய்கிறது.
அ.தி.மு.க., கூட்டணியை பொறுத்த வரை அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மற்றும் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் பலக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் வரும் 6 ம் தேதி ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜயகாந்தும், ஜெயலலிதாவும் இதுவரை இணைந்து பேட்டியோ , பிரசாரமோ செய்ததில்லை.
இருவரும் இணையும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இரு கட்சி தொண்டர்களும் பலத்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
கோவை பிரசார கூட்டம் தொடர்பாக அ.தி.மு.க., தலைமை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதாக நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment