இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியும், திமுகவுமே முக்கியக் காரணம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா.
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. முத்துக்குமரனை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் அவர் மேலும் பேசும்போது,
’’இலங்கையில் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணமாக இருந்தது காங்கிரஸ் - திமுக கட்சிகள் தான். மன்மோகன்சிங்கின் நட்பு நாடான அமெரிக்கா, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன; அதை விசாரிக்க வேண்டும் என கூறியது. அதேபோல, ஐரோப்பிய நாடுகளும் குற்றச்சாட்டு தெரிவித்தன.
ஆனால், இந்திய அரசு இலங்கைக்கு நிதியுதவி செய்து தமிழினத்தை அழித்தது. அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கை சென்ற போது, அதிபர் ராஜபஷவின் ரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கினார்.
எனவே, திமுக கூட்டணிக் கட்சிகள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டன. அதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதைக் கண்டிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் எப்படி தீர்வு கிடைக்கும். பணபலத்தின் மூலம் ஜனநாயகப் படுகொலை நடப்பதை தடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி விமர்சிப்பதன் மூலம் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சாதனைகளைக் கூறி வாக்கு கேட்போம் என்கிறார்.
ஆனால், இந்தியாவில் இதுவரை பதவி வகித்த உள்துறை அமைச்சர்களில் செயல்பாடு இல்லாத அமைச்சர் இவர்தான். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவுமே திருப்திகரமாக இல்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றம் மூலம் தேசிய அளவிலும் அரசியல் மாற்றம் நிகழும்’’ என்றார் அவர்.
- ஜெ. -விஜயகாந்த் : ஒரே மேடையில் பிரச்சாரம்
- குஷ்பு-வடிவேலு பிரசாரம் எடுபடாது; நடிகர் சரவணன் பே...
- வடிவேலின் விமர்சனத்தை நிஜமாக்க துடிக்கும் விஜயகாந்...
- இந்தியா வென்று விட்டது எப்போது நிர்வாணமாவார் பூனம்...
- ரஜினி, கஜினி, டோணி ஒன்றாக இருந்தால் சாதிக்க முடியா...
- கேப்டன் என்றால் டோணி மட்டுமே-விஜயகாந்த் இனி பேசப்ப...
- தொடரும் ஜெயலலிதாவின் ஆணவபோக்கு பிரசாரத்தின்போது சர...
- டெலிவிஷனில் கிராபிக்ஸ் காட்சி: நான் யாரையும் அடிக்...
- நாங்கள் யாரும் அடிமை இல்லை :EVKS
- சென்னை அதிமுகவின் கோட்டை: ஜெ.
- ஏழாம் அறிவு எப்போ ரிலீஸ்?
- நயனுக்கு ட்ரிபிள் பெட்ரூம் பிளாட் பரிசு!!
- மோதலைத் தவிர்த்த சிம்பு - தனுஷ்
- டோணி போட்ட தப்புக் கணக்கு
- குஷ்பு திமுகவுக்கு ஓட்டு கேட்பது நியாயமா? சிங்கமுத...
- வடிவேலு இரவு 11 மணிக்கு மேல் என்ன செய்வார் என்ற ர...
- விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண...
- நான் முதலமைச்சரா? கலைஞர் பேச்சு
- கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு
- தி.மு.க.- பா.ம.க. வேட்பாளர்களை தோற்கடிக்க சீமானுக்...
- தலை பெரிதாக இருந்தால் தலைவர் கிடையாது -வடிவேலு
- மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போட மதுரை கலெக்டர் வ...
- சத்தம் போட்டால் பேசமாட்டேன் : அதிமுக தொண்டர்களிடம்...
No comments:
Post a Comment