அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோருக்கு 10 கேள்விகளைக் கேட்டுள்ளார். 2004 முதல் 2009 வரையிலான சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த கேள்விகள் இவை.
கேஜ்ரிவால் தலைமையில் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தினர் சில தினஙக்ளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் கத்காரி ஆகியோரது வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில், தனது இணையதளத்தில் இவர்களுக்கு ஆளுக்கு பத்து கேள்விகளைக் கேட்டுள்ளார் கேஜ்ரிவால்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து மக்களை முட்டாள்களாக வைத்திருக்க முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கேஜ்ரிவால் மேலும் கூறியுள்ளதாவது...
மே 30ம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் அன்னா ஹஸாரே குழுவினர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களில் உணமை இல்லை என்று தெரிய வந்தால், நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகுகிறேன் என்று கூறியிருந்தார். அதை பிரதமர் இன்னும் மனதில் வைத்திருக்கிறாரா....
சிஏஜி என்பது ஒரு அரசியல்சாசனப்படி அமைக்கப்பட்ட சுயேச்சையான அமைப்பாகும். பாரபட்சமின்றி செயல்படும் அமைப்பு. அந்த அமைப்பு உங்களை நோக்கி நேரடியாக விரலை நீட்டுகிறது. சம்பந்தப்பட்ட துறை உங்கள் வசம் இருந்தபோதுதான் அத்தனையும் நடந்தது என்று திட்டவட்டமாக கூறுகிறது. பிறகு எதற்காக நீங்கள் ராஜினாமா செய்யாமல் இருக்கிறீர்கள், யாருக்காக காத்திருக்கிறீர்கள்?
சர்ச்சைக்குரிய, தனியார் சுரங்க உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம். அப்படிச் செய்வதிலிருந்து அரசை எது தடுக்கிறது, யார் தடுக்கிறார்கள்?.
சுரங்க ஊழல் விவகாரத்தில் அரசுக்கும், பாஜகவுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பது போலத்தான் தெரிகிறது.
இப்போது கத்காரியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். பாஜக ராஜய்சபா எம்.பி. அஜய் சன்செட்டி உங்களது தொழில் முறை பார்ட்னரா என்பதை கத்காரி விளக்க வேண்டும். சுரங்க அனுமதி மூலம் நீங்களும் பலன் பெற்றிருக்கிறீர்களா என்பதையும் கத்காரி விளக்க வேண்டும்.
பிரதமரின் ராஜினாமாவை நீங்கள் கோருகிறீர்கள். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உங்களது கட்சி முதல்வர்களின் நிலைப்பாடு என்ன?. அவர்கள் ஏன் ராஜினாமா செய்யாமல் உள்ளனர்?
இப்படி பிரதமருக்கும், கத்காரிக்கும் தலா 10 கேள்விகளைக் கேட்டுள்ளார் கேஜ்ரிவால்.
அரவிந்த் கேஜ்ரிவால் கேள்விகள் அனைத்தும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ReplyDeleteஉதசீனபடுத்துவதர்க்கில்லை. என்றோ ஒரு நாள் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.