கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்த முதல்- மந்திரி மம்தா பானர்ஜி அடிக்கடி சிக்கல்களில் சிக்கி கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு டெலிவிஷன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியை கார்ட்டூன் விவகாரம் பற்றி மாணவ- மாணவிகள் சரமாரியாக கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டனர். இதனால் கோபமான மம்தாபானர்ஜி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பேல்பகரி என்ற இடத்தில் மம்தா பானர்ஜி பேரணி பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது ஷிலதித்யா சவுத்திரி என்ற விவசாயி பாதுகாப்பு வளையத்தை தாண்டி முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நோக்கி பாய்ந்து சென்றார். பொது மக்கள் முன்னிலையில் மம்தாபானர்ஜியை பார்த்து ஆவேசமாக கேள்விகள் கேட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பாய்ந்து சென்று விவசாயியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்தல், பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுத்திரி சார்பில் ஜாமீன் கேட்டு மேற்கு மிட்னாப்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஜெயிலில் இருந்து விடுதலையான சவுத்திரி மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில் “தன்னிடம் கேள்விகள் கேட்ட விவசாயி நக்சலைட்டு என்று குற்றம் சாட்டி இருந்தார். எனவே மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டி.வி. ஷோவில் தன்னிடம் கேள்விகள் கேட்ட மாணவ- மாணவிகள் “மாவோயிஸ்ட்” என மம்தா பானர்ஜி முத்திரை குத்தினார். இப்போது விவசாயியை “நக்சலைட்” என்று கூறியிருப்பது மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் மனித உரிமை கமிஷன் ஒரு பிரச்சினையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் மேற்கு வங்காள அரசுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்படுத்துவதாக உள்ளது.

No comments:
Post a Comment