சல்மான்கான் நடித்த 'ஏக்தா டைகர்' படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளிலேயே ரூ.32 கோடி வசூல் ஈட்டியது. 5 நாட்களில் வசூல் ரூ.100 கோடியை தொட்டது.
இந்தியில் ரூ.100 கோடி வசூல் ஈட்டும் படங்களுக்கு பெரிய கவுரவம் அளிக்கின்றனர். அப்படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் உயர்த்தப்படுகிறது. அப்படத்தின் நாயகி முன்னணி கதாநாயகி அந்தஸ்தையும் பெறுகிறார்.
அசின் நடித்த மூன்று இந்தி படங்கள் ரூ.100 கோடி வசூலித்ததால் அவரும் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்துள்ளார். ஏக்தா டைகர் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இரு வாரங்களில் மொத்தம் ரூ.210 கோடி வசூலித்துள்ளது.
அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் அதிக தொகை வசூலித்த படமாக இருந்தது. அந்த படத்தின் வசூலை சல்மான்கான் படம் மிஞ்சி உள்ளது. இதனால் சல்மான்கான் சம்பளம் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய சினிமாக்களில் எந்த நடிகரும் இவ்வளவு பெரும் தொகை சம்பளம் வாங்கியது இல்லை.
No comments:
Post a Comment