பார்லி.,யை முடக்கி ஜனநாயக்தை கேலிக்கூத்தாக்கி வரும் பா.ஜ.,வை கண்டிப்பதாகவும், இது போன்ற எதிர்கணைகளுக்கு கட்சி எம்.பி.,க்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் காங்., எம்.பி.,க்கள் குழு கூட்டத்தில் கட்சி தலைவர் சோனியா பேசினார்.
பார்லி., தொடர் முடக்கம் காரணமாக கட்சி எம்.பி.,க்களை கூட்டி சோனியா அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்: மும்பை, அசாம் கலவரத்திற்கு கண்டிக்கத்தக்கது. இது மிகவும் கவலை தரும் செயல். சமீப காலமாக பார்லி.,யை பா.ஜ., தொடர்ந்து முடக்கி வருகிறது. இது காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., தேவையில்லாமல் கொடுக்கும் இடையூறு. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மிரட்டும் செயலாக இருக்கிறது.
கட்சியினருக்கு சோனியா பூஸ்ட்:
பிளாக்மெயில் பா.ஜ.,வுக்கு பட்டர் , ரொட்டி சாப்பிடுவது போல ஆகி விட்டது. நம் மீது தவறு இல்லை. பார்.,லியை மதிக்காமல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது. இது மக்களை அவமதிக்கும் செயல். பா.ஜ., தவறான பிரசாரத்தை பரப்பும் பா.ஜ.,வுக்கு தக்க பதிலடி கொடுக்க அனைவரும் தயராக வேண்டும். கூட்டாக எதிர்த்து போராடி குற்றமற்றவர்கள் என நாம் பா.ஜ.,வுக்கு நிரூபித்து காட்டுவோம். இவ்வாறு சோனியா பேசினார்.
6 வது நாளாக பார்லி., ஒத்திவைப்பு: இதற்கிடையில் இன்று காலை பார்லி., துவங்கியதும் எதிர்கட்சியினர் வழக்கம்போல அமளியில் ஈடுபட்டனர் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment