கற்பழிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் நடத்துவது வீண் வேலை என்று பேசிய மகாராஷ்டிர அமைச்சரை பெண்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். செருப்பும் வீசி தாக்குதல் நடத்தினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான லட்சுமண்கராவ் தோப்லே ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால் உடனே அவருக்காக தர்ணா நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் வீண் வேலை. கற்பழிப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு உரிய கல்வியைத் தர வேண்டும். குறிப்பாக சட்டக் கல்வியைத் தந்து அவர்கள் வளர்ந்து குற்றவாளியை சட்டத்தின் மூலம் தண்டிக்கும்படி செய்ய வேண்டும் என்று உளறிக் கொட்டினார்.
இதனால் கடுப்பான கூட்டத்தில் இருந்த பெண்கள் அவர் மீது செருப்பை வீசினர். மேலும் மேடையில் ஏறி அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
இதையடுத்து மேடையிலிருந்து இறங்கி காரில் ஏறி தப்பித்து ஓடினார் தோப்லே.
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் ஒரு தலித் பெண்ணின் உடைகளைக் களைந்து தாக்கினர். இந்த சம்பவத்தை தோப்லே ஆதரித்துப் பேசி அப்போதே கண்டனத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் தோப்லேயும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.
No comments:
Post a Comment