இயக்குனர் ஹென்றி ஜோசப் இயக்கத்தில் புதுமுக நடிகர் டாக்டர் சரவணன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘அகிலன்’. ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு டாக்டர் நடிக்க வந்து தனது சொந்த படங்களை விளம்பரப்படுத்தி பவர்ஸ்டார் என்ற பெயரோடு பல ரசிகர்களை தன் வசம்
இழுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் மற்றொரு டாக்டர் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.
ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கங்கள் வாங்கவில்லை என்றதும் “என்னடா இது சிவாஜிகணேசனுக்கு அடுத்து இன்னும் யாருமே தங்கப்பத்தக்கம் வாங்கலையா” என்று கேட்கும் பெரியவர்களும் இருக்கின்றனர். அது தான் சினிமாவின் பலம். இந்தப் படத்திலும் தங்கப்பதக்கம் கெட்-அப்பில் தான் வந்திருக்கிறார் டாக்டர் சரவணன். உண்மையில் சொல்லப்போனால் நடிகர்கள் விஜய், சூர்யா, விஷால் ஆகியோர் போலீஸ் கெட்-அப்பிற்கு பொருத்தமே கிடையாது.
எனக்கு தெரிந்து போலீஸுக்கு சிக்ஸ் பேக்கெல்லாம் கிடையவே கிடையாது சிங்கிள் பேக் தான்.சிக்ஸ் பேக்குடன் போலீஸ் உடையில் விஜய், சூர்யா ரேம்ப் ஷோக்களில் வேண்டுமென்றால் நடக்கலாமே தவிர ரோட்டில் நடக்க முடியாது. அப்படி நடந்தால் பெண்கள் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். போலீஸுக்கெல்லாம் ஓய்வெடுக்கவே நேரமில்லாத போது உடற்பயிற்சி செய்ய எங்கிருக்கிறது நேரம்.
சாதாரண போலீஸ்காரர்கள் டாக்டர் சரவணனைப் போல் தான் இருப்பார்கள். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் டாக்டர், போலீஸ் கெட்-அப்பிற்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதால் தான். எனக்கும் இவருக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லை. ஆனாலும் அவர் படத்தின் இசை வெளியீட்டிற்கு நான் வந்தைருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் அவர் ஒவ்வொரு மாதமும் இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்வதை நண்பர்கள் மூலமாக அறிந்து தான்” என்று டாக்டர் சரவணனை வாழ்த்தி பேசினார்.
பேசும்போது சரவணன் என்று சொல்வதற்கு பதிலாக சீனிவாசன் என்று சொல்லிவிட்டதால் மறுபடியும் வந்து பேசியபோது “ சரவணனை சீனிவாசன் என்று மாற்றிச் சொல்லிவிட்டேன். சீனிவாசனுக்கு வாழ்த்தே தேவையில்லை. அவர் ஏற்கனவே பவர்ஃபுலான ஆள் தான். அவரை விட பவர்ஃபுல்லாக வரவேண்டுமென சரவணனை வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.
பெரிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் இந்த புதுமுக நடிகரின் இசைவெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு காரணம் மதுரையில் 11 அமைப்புகள் அமைத்து மக்களுக்கு சமூகசேவை செய்துகொண்டிருக்கும் டாக்டர் இவர் என்பதால் தான்.
No comments:
Post a Comment