உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியில்லாத நபர்கள் விதவைகள் பென்ஷன் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல போலி பென்ஷன்தாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
திருமணமான பெண்கள் 131 பேர் தங்கள் கணவர் இறந்துவிட்டதாக போலியான தகவல்களை கொடுத்து மாதம் 300 ரூபாய் பென்ஷன் பெற்று வந்துள்ளனர். மேலும் விதவை பென்ஷன் பட்டியலில் உள்ள 299 பேர் இறந்த பிறகும், அவர்களின் பெயரில் மாதந்தோறும் பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையினை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெற்று வந்துள்ளதை இப்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து விதவை பென்ஷன்தாரர்களை முறைப்படுத்த சமூக நலத்துறை தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment