கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அணு சக்தி பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவை அனுமதி அளித்து இருந்தது. இதை எதிர்த்து என்ஜினீயர் சுந்தர்ராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறி இருந்தது. ஆனால் கடலில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் புதிய உத்தரவை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் முந்தைய உத்தரவில் மாற்றம் செய்து புதிய உத்தரவை தாக்கல் செய்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்பத்தின் அளவு கடல்நீரின் வெப்பத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு விசாரணையை முடித்து வைத்தனர். கூடங்குளம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை போராட்டக்குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

No comments:
Post a Comment