நாகர்கோவில் செம் மாங்குடி ரோட்டில் இன்று மாலை தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு தீர்மான விளக்கவுரை பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக அவர் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தர விட்டு உள்ளார். அதன்பேரில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக இங்கு வந்துள்ளேன்.
டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்து வருகிறார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க கூடாது. மறைமுகமாக எங்காவது பயிற்சி அளிக்கப்பட்டால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஹெலன்டேவிட்சன் எம்.பி., புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் குமரி ஸ்டீபன், மயிலாடி பேரூராட்சி தலைவர் சாய்ராம், மாவட்ட அவைத்தலைவர் ஜோசப் ராஜ், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் பொன்.சின்னத்துரை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் சிங்கா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment