கிரானைட் குவாரிகளில் ரூ.1,200 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா அனுப்பியுள்ள இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் 18 தனிக்குழுக்களை அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
26-வது நாளாக கிரானைட் குவாரிகளில் இன்றும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90 குவாரிகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் ஒரு லட்சம் கிரானைட் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டு மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, தமிழக அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில்,"மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதிகளில் 175 கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 86 குவாரிகளில் முறைகேடுகள் செய்ததாக சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் 56 குவாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து பதுக்கி வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை நடந்த சோதனையில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கற்களை பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.மேலும் 37 குவாரிகளில் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment