கடல் எல்லை தொடர்பாக பல நாடுகளுடன் முட்டல் மோதலில் உள்ள சீனா, தனது கடல் பகுதியைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்களை (unmanned aerial vehicles -UAV) பயன்படுத்த உள்ளது.
இதற்காக 11 ஆளில்லா விமானத் தளங்களைக் கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை சீன அரசின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் வட சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவதில் ஜப்பானில் ஆரம்பித்து வியட்நாம் வரை பல நாடுகளுடனும் மோதலில் உள்ளது சீனா. அதே போல இந்தப் பகுதியில் எண்ணெய் துரப்பன பணிகளில் ஈடுபட இந்தியாவுக்கு மற்ற நாடுகள் அனுமதி தருவதையும் சீனா எதிர்த்து வருகிறது.
இந் நிலையில் தனது கடல் எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பயன்படுத்துவது மாதிரி ஆளில்லா விமானங்களைக் கொண்டு கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment