திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு அனைத்தையும் அனுபவித்து விட்டு இப்போது ஏமாற்றி விட்டதாக பெண் என்ஜீனியர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் அரவங்காட்டைச் சேர்ந்தவரின் மகள் சாவித்திரி. 25 வயதான இவர் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில்,நானும், எனது ஊரில் நான் வசித்து வரும் பகுதியிலேயே வசித்து வரும் கார்த்திக் என்பவரும் பள்ளிப் பருவம் முதலே பழகி வருகிறோம். ஆரம்பத்தில் இது நட்பாக மட்டுமே இருந்தது. பின்னர் காதலாக மாறியது.
2007-ம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். இது கார்த்திக்கின் பெற்றோருக்கும் தெரியும். இருவரும் உல்லாசமாக பல இடங்களுக்கு சென்றுள்ளோம்.
என்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று கார்த்திக் உறுதியாக கூறி வந்ததால் அவர் சொன்னதையெல்லாம் கேட்டேன், அவர் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டேன். இதைப் பயன்படுத்தி அவர் பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
2008-ம் ஆண்டு எனக்கு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு நான் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளேன். அப்போது கார்த்திக்கு வேலை கிடைக்காததால் அவர் என்னை தேடி அடிக்கடி பெங்களூருக்கு வருவார்.
2011-ம் ஆண்டு மே மாதம் கார்த்திக்கிற்கு சென்னை காரப்பாக்கத்தில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவரும் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
எனவே, நான் சென்னை நொளம்பூரில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டிற்கு வாரா வாரம் வருவேன். நான் வரும்போதெல்லாம், 2 நாட்கள் தங்கி இருந்து கார்த்திக்கை பார்க்கச் செல்வேன்.
இப்படியே காதல் நீண்டு கொண்டிருந்ததால் திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திகைக் கேட்டேன். அதற்கு அவர் ஜாதகம் பார்த்து விட்டு வீட்டில் கேட்டுச் சொல்வதாக கூறினார். பின்னர் மீண்டும் அவரை சந்தித்தபோது ஜாதகம் பொருந்தவில்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்.
இது எனக்கு பெரும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. இதனால் வேலைக்குப் போகாமல் எனது உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளேன். என்னை மோசடி செய்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாவித்திரி.
இந்தப் புகாரைப் பதி்வு செய்து விசாரணை நடத்திய போலீஸார் கார்த்திக்கைக் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment