வேலூர் சிறை வளாகத்தில், பத்திரிகையாளர்களிடையே மத்திய அமைச்சர் அழகிரி டென்சன் ஆனார். சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்துப் பேசினார். வீரபாண்டி உடனான சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தி்த்த அமைச்சர் அழகிரி கூறியதாவது, வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் நலமுடன் உள்ளார். அவரிடம் நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தேன். கிரானைட் முறைகேடு தொடர்பாக தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, நித்யானந்தா குறித்து செய்தி போடும் தாங்கள் (பத்திரிகைகள்) மின்வெட்டு குறித்து ஏன் செய்தி போடுவதில்லை என்று டென்சனாக கூறிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment