இயக்குனர் பிரபுசாலமனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த அறிவழகன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி முக்கியக் கதபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘சாட்டை’. பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார்.
சாட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று(28.08.12) காலை நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், எஸ்.பி.ஜனநாதன், கௌதம் மேனன், பிரபு சாலமன்,அமீர், லிங்குசாமி, சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இசை வெளியீட்டு விழா நடந்த பிறகு பேசிய எஸ்.பி.ஜனநாதன் “பொதுவாக எம்.ஜி.ஆர்-ஐ எல்லோரும் வாத்தியார் என்று அழைப்பார்கள். எம்.ஜி.ஆர் பாடல்கள், வசனங்கள், சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் நிறைய கருத்துகள் இருக்கும். எம்.ஜி.ஆர் படத்தை பார்ப்பவர்களுக்கு அவர் ஏதாவது ஒரு நல்ல கருத்தை சொல்லிக்கொடுப்பார்.
நான் எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து வளர்ந்தவன். சாட்டை படத்தில் சமுத்திரக்கனி பள்ளிக்கூட வாத்தியாராக நடித்திருக்கிறார்.எம்.ஜி.ஆரை விர அதிக கருத்துக்களை சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார்.அந்த வகையில் சமுத்திரக்கனி எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் என்று கூட சொல்லலாம்” என்று கூறினார்.
பள்ளிக்கூடம் சம்மந்தமான நிறைய கருத்துக்களை படம் எடுத்துரைக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பையும், பல விருந்துகளையும் இந்த படம் வாங்கும் என மேடையில் பேசிய அனைத்து இயக்குனர்களும் கூறினர்.
No comments:
Post a Comment