குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டுமென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உள்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், மத்திய இணை மந்திரி நாராயணசாமி இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குன்னூரில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து மத்திய ராணுவ மந்திரி அந்தோணியிடம் எடுத்துக் கூறினோம். இன்னும் 2 நாட்களில் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஈரானில் இருந்து பிரதமர் இந்தியா திரும்பியதும் இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment