முன்னாள் தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மற்றும் கரூர் பகுதியைச் சேர்ந்த 7 பேரிடம், 2ம் நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேரு உட்பட ராமஜெயம் உறவினர் 20 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
ராமஜெயம் கொல்லப்படுவதற்கு 2 மாதம் முன்பு வந்த 3000 அலைபேசி அழைப்புகளை சி.பி.சி.ஐ.டி ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு செய்த 3000 அழைப்புகளின் பதிவுகளில், 251 அழைப்புகள் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் அழைப்புகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த 251 பேரிடம் நடத்திய விசாரணையில் 7 நபர்கள் மீது போலீசிற்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் பிடிபடு வார்கள், என்று காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment