தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்நேரத்திலும் உயர்த்தபடலாம். ஆனால் இந்த கட்டண உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் இருக்குமாம்.
தமிழகத்தில் 2 லட்சத்து 9,115 ஆட்டோக்கள் உள்ளன. அதிலும் தலைநகர் சென்னையில் மட்டும் 67,022 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடந்த 2007ம் ஆண்டு தான் கடைசியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் விலை பலமுறை உயர்ந்துவி்ட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படவில்லை. இதனால் கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு போக்குவரத்துத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி போக்குவரத்துத் துறை ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்த அரசு முதல் 2 கிலோ மீட்டருக்கு புதிய கட்டணம் நிர்ணயித்துள்ளது. அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கான கட்டணம் மற்றும் இரவு நேர கட்டணம் ஆகியவையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு சுமை ஏற்பட்டுவிடாமலும், அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் இந்த புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த புதிய கட்டணம் குறித்த அறிவிப்பை அரசு எந்நேரத்திலும் வெளியிடலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment