ஆஸ்திரேலியாவில் அக்கம் பக்கத்தினருக்குத் தொந்தரவு தரும் வகையில் கூடலில் ஈடுபட்டு வந்த ஒரு தம்பதியை பிடித்து கோர்ட்டில் நிறுத்தி விட்டனர் போலீஸார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டர்ட் நகரில்தான் இந்தக் கூத்து. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஜெஸ்ஸிகா ஏஞ்செல் மற்றும் காலின் மெக்கன்ஸி. இருவரும் தம்பதியர். இவர்கள் மீது போலீஸில் நூதனப் புகார் வந்தது. அதாவது இரவெல்லாம் இவர்களின் கூத்து தாங்க முடியவில்லை. சத்தம் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் சங்கட்டமாக இருப்பதாக போலீஸாருக்கு வந்த புகார்கள் கூறின.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்ததால், இனியும் அமைதி காக்க முடியாது என்று போலீஸார் ஜீப்புகளை எடுத்துக் கொண்டு ஜெஸ்ஸிகா தம்பதி வீட்டுக்குப் பறந்து வந்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
அவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் போட்டனர். இருவரையும் கொண்டு போய் கோர்ட்டிலும் நிறுத்தினர். அவர்கள் மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றச்சாட்டு நிரூபணமானால் இருவருக்கும் தலா 3000 பவுண்டு அபராதம் விதிக்கப்படலாமாம்.
ஏன் இவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர் என்று விசாரித்தால், இவர்கள் போட்ட சத்தம் அளவுக்கு அதிகமானதாம், அதாவது ஒலி மாசு ஏற்பட்டு விட்டதாம். அதனால்தான் அந்த சட்டத்தில் இவர்களை மாட்டி விட்டுள்ளனர்.
ஜெஸ்ஸிகாவுக்கு 34 வயதாகிறது, மெக்கன்ஸிக்கு 45 வயதாகிறது. இதில் ஜெஸ்ஸிகாவின் சத்தம்தான் அதிகம் என்று போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனராம்.
இந்த விவகாரம் குறித்து மெக்கன்ஸி கூறுகையில், எப்படிங்க செக்ஸ் இல்லாமல் மனுஷன் உயிர் வாழ முடியும். ஆனால் எங்க பிரச்சினைக்கு முக்கியக் காரணமே ஜெஸ்ஸிகாதாங்க. அவருக்கு தினசரி செக்ஸ் தேவைப்படுகிறது. வாரத்திற்கு 5 நாள் அவரைத் திருப்திப்படுத்தத்தான் செய்கிறேன். அதுவும் தினசரி 7 மணி நேரம் வரை கூட அது நீடிக்கிறது. உறவின்போது ஓவராக சத்தம் போட்டுஇப்போது காரியத்தைக் கெடுத்து விட்டார் ஜெஸ்ஸிகா.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு நெஞ்சு வெடித்து செத்து விடுவேன் போல. அந்த அளவுக்கு ஜெஸ்ஸிகாவுக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. என்னை அவர் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறார் என்று தனது சொந்தப் பிரச்சினையையும் சொல்லிப் புலம்பினார்.
இந்த நிலையில் தற்போது இடைக்காலமாக ஜெஸ்ஸிகாவுக்கு கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது உறவின்போது ஓவராக கத்தக் கூடாது, முணகக் கூடாது, குரல் எழுப்பக் கூடாது, கூச்சலிடக் கூடாது என்பது அதன் சாராம்சமாகும். சுற்றுச்சூழல் துறை நிர்ணயித்துள்ள அளவைத் தாண்டி அவரது குரல் வரக் கூடாதாம்.
ஆனாலும் இந்த உத்தரவு வந்த அடுத்த 2 நாட்களிலேயே மறுபடியும் ஜெஸ்ஸிகா கூச்சல் போடுவதாக கூறி போலீஸாரிடம் சிலர் புகாருடன் கிளம்பி வந்து விட்டதால் மறுபடியும் வீட்டுக் கதவைத் தட்டி வார்னிங் கொடுத்தனராம் போலீஸார்.
அதிகாலை நேரத்தில் சென்ற போலீஸார் கதவைத் தட்டி இருவரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு ஜெஸ்ஸிகா, மெக்கன்ஸி மீது மறுபடியும் ஒரு வழக்கைப் போட்டுள்ளனர். அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறதாம்.
இந்தப் பிரச்சினை குறித்து ஜெஸ்ஸிகா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒருவர் கூறுகையில், சவுண்டுன்னா சவுண்டு அப்படி ஒரு சவுண்டுங்க. ஜெஸ்ஸிதான் அதிகமாக சத்தம் போடுகிறார். அவரது சத்தம் ஆபாசமாக வேறு இருப்பதால் எங்களால் பொறுக்க முடியவில்லை. அதான் போலீஸுக்குப் போய் விட்டோம் என்றார்.
No comments:
Post a Comment