இந்தியாவில் தங்கத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அங்கு தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண்கள் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தியைக் குத்தியிருப்பார்கள் என்று எழுதியுள்ளது சீனப் பத்திரிக்கை ஒன்று.
இந்தியர்களின் தங்க மோகம் குறித்துசீனாவைச் சேர்ந்த பீப்பிள்ஸ் டெய்லி அரசாங்க நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தங்கத்தை எப்படியெல்லாம் இந்தியர்கள் கொண்டாடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.
அந்த செய்தி...
இந்தியப் பெண்கள் தங்க நகை இல்லாமல் வெளியில் செல்வதில்லை. தங்கத் தோடு போடாமல் எந்தப் பெண்ணையும் பார்க்க முடியாது. தங்க மூக்குத்தியாவது அணிந்துதான் அவர்களைப் பார்க்க முடியும். சாலைகளில் பிச்சை எடுக்கும் பெண்கள் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். இந்தியர்களின் கருமையான நிறம் தங்கத்தை எடுப்பாக்கிக் காட்டுவது அவர்களின் தங்க மோகத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்திய அரசு பேப்பர் கோல்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் இந்தியர்களின் தங்க மோகத்தை உணர்ந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பெண்கள் நகை அணியாமல் வெளியே போவது சரியல்ல என்ற கருத்து உள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்க நகைகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் அணிகிறார்கள். இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை தங்கத் தோடு, தங்க மூக்குத்தி, நெக்லஸ், மோதிரம் போன்றவற்றை அதிகம் அணிகிறார்கள். இவை இல்லாமல் எந்தப் பெண்ணையும் பார்க்க முடியாது.
பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆண்களும் கூட பெரிய அளவில் நகைகளை அணிகிறார்கள். மோதிரம், கழுத்தில் செயின் போன்றவை ஆண்கள் பொதுவாக அணியும் தங்க நகைகள் ஆகும்.
இந்தியாவில் மகள்களுக்கு தங்க நகைகளை சேர்த்து வைப்பதில் தாய்மார்கள் கவனம் காட்டுகிறார்கள். இதை அவர்கள் பெண்ணுக்குச் சேர்த்து வைக்கும் சீதனமாக, வரதட்சணையாக பார்க்கிறார்கள். மகள்களை அழகுபடுத்திப் பார்ப்பது மட்டுமல்லாமல், பெண்ணுக்குத் தாங்கள் கொடுக்கும் சொத்தாகவும் பார்க்கிறார்கள்.
இப்படி இந்தியர்களிடையே நகை மோகம் அதிகம் இருப்பதால்தான் நகைக் கடைகளும் அதிகம் உள்ளன. சிறிய நகராக இருந்தாலும் சரி, பெரிய நகராக இருந்தாலும் நகைக்கடைகள் இல்லாத ஊரே கிடையாது. நகைள் அதிகம் விற்பனை ஆவதால்தான் இந்தியாவில் உள்ள நகைக் கடைகள் பிரமாண்டமாகவும், விளக்கொளியில் ஜொலித்தபடியும் காட்சி தருகின்றன என்று அந்த செய்தி கூறுகிறது.
No comments:
Post a Comment