அமெரிக்காவில் விஸ்கான்சின் நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கடந்த 5-ந் தேதி ஒரு மர்ம மனிதன், வழிபாட்டுக்கு வந்த சீக்கியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதில், 6 சீக்கியர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு போலீஸ் அதிகாரி சுட்டதில், அந்த மர்ம ஆசாமியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவன் உயிரிழந்தான்.
குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம மனிதன் பெயர் மைக்கேல் வேட் பேஜ் (வயது 40) என்றும், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவன் என்றும் தெரிய வந்தது. மேலும் அவன் வெள்ளை இனவெறி கும்பல்களுடன் தொடர்புடையவன் என்றும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மில்வாகி மாவட்ட மருத்துவ பரிசோதகரின் விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், பேஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி, தன் வயிற்றில் சுட்ட பிறகு, அவன் துப்பாக்கியால், தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment