மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் 30-வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம் கிரானைட் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று மேலூர் பகுதிக்கு சென்று கிரானைட் குவாரிகளில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கிரானைட் அலுவலகங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து பிரமாண்ட கிரானைட் அலுவலகங்கள் இடித்து தள்ளப்பட்டன. இன்றும் 2 அலுவலகங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. குவாரி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் நடத்தி வரும் சோதனைகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள இந்த முறைகேடுகள் குறித்து இதுவரை 40 சதவீத மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்னும் 60 சதவீத பணிகள் உள்ளதால் அதிகாரிகளின் சோத னையை மேலும் 3 வாரங் களுக்கு நீட்டித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட் டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்களின் வங்கி கணக்குகள், பாஸ் போர்ட்டு கள் முடக்கப்பட்டுள்ளன. போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங் களுக்கு சென்று குவாரி அதிபர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள். மு.க.அழகிரியின் மகன் மகன் துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளி வைத்துள்ளது.
ஆனாலும் துரைதயாநிதி இருப்பிடத்தை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட 5 பேர் விரைவில் போலீசில் சரண் அடைய திட்டமிட்டுள்ளனர். மற்ற குவாரி அதிபர்கள் 9 பேரையும் பிடிக்க தனிப் படையினர் பல்வேறு இடங்களில் முகாமிட்டு உள்ளனர். இதற்கிடையே கிரானைட் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கொட்டாம் பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் என் பவரையும், மேலூர் ஜோதி நகரைச் சேர்ந்த பிரசாத் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சொக்கலிங்கம் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ஓய்வு பெற்ற பின்பு மதுரா கிரானைட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment