சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரில் உள்ள கிளப் ஒன்றில் சூதாடிவிட்டு, அதில் கிடைத்த ரூ.30 ஆயிரம் பணத்தை வங்கியில் செலுத்தியபோது, அதில் 13 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய குற்ற பிரிவு போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு மூளையாக செயல்பட்ட கொளப்பாக்கத்தை சேர்ந்த, பாபு, நெசப்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, மற்றும் முகமது ஜாபர், கங்கை அமரன், சந்திரசேகர், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ்காரர் செல்வராஜை கைது செய்தபோது, இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது உயர் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராஜை போல, மேலும் பல போலீசார் கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பில் இருக்கலாமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் செல்வராஜை அவருடன் கைதான அண்ணாதுரைதான் சூதாடுவதற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது, அண்ணாதுரையும், போலீஸ்காரர் செல்வராஜும் நெறுங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. போலீஸ் காரர் செல்வராஜ், போலீஸ் வட்டாரத்தில் உள்ள தனது நண்பர்களையும் சூதாட்டத்துக்கு அழைத்துச் சென்றாரா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் போலீசார் கள்ளநோட்டு கும்பலுக்கு உடந்தையாக இருந்தார் களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாபுவும், அண்ணா துரையும் போலீஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில், மேலும் 3 பேர் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் பதுங்கி இருப்பதாக கூறி இருந்தனர்.
இவர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். வட சென்னையை சேர்ந்த இவர்கள் போலீஸ் தேடுவதை அறிந்ததும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். கள்ள நோட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
No comments:
Post a Comment