குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல் அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம் பால் வாங்கி வரச் சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்க மாட்டேன் என்கிறாள் என்று கூறியிருந்தார்.
மோடியின் இந்த கருத்துக்கு மத்திய செய்தித் துறை மந்திரி அம்பிகா சோனி உள்பட மற்ற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
குஜராத்தில் மக்கள் மத்தியில் உள்ள இரத்த சோகை பிரச்சினை குறித்த அறிக்கையை பற்றித்தான் மருத்துவ அமைப்புகள் பேசி வருகின்றனவே தவிர, சமுதாயத்தில் ஏழ்மையைப் பற்றி பேசவில்லை. அவர்கள் பல்வேறு காரணங்கள் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ மோடியைப் பார்த்து பயப்படுகிறது.
மோடி என்கிற பெயரை கேட்டாலே காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்று குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு காரணம்.
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் மோடியைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். அரசியல் அல்லாத விசயங்களிலும் கூட, மோடி மீது குறை கூறுவதற்கு அவர்களின் பயம் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment