அசாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பூர்வீக போடோ இன மக்களுக்கும், வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கலவர பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்றாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்கள் ஓய்ந்திருந்த வன்முறை நேற்று மீண்டும் ஏற்பட்டது. சிராங் மாவட்டத்தில் அம்குரி என்ற இடத்தில் உள்ள முகாமில் இருந்து நேற்று மாலை 2 வாகனங்களில் பலர் சென்றனர். அந்த வாகனங்களை மர்ம மனிதர்கள் சிலர் வழிமறித்து தாக்கினார்கள். அப்போது 5 பேர் குத்திக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் போது 2 பேர் காணாமல் போய்விட்டனர். இதனால் அசாம் கலவர சாவு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக அசாம் ஐ.ஜி. (சட்டம்-ஒழுங்கு) எல்.ஆர்.பிஷ்னோய் தெரிவித்தார். மேலும் சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் கோக்ரஜார் மாவட்டத்தில் நேற்று பகலில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. வதந்தி பரவியதன் காரணமாக கர்நாடகம், தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வந்த அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கணிசமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்று உள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து மட்டும் சுமார் 35 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அவர்களை திரும்ப அழைப்பதற்காக கர்நாடக துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், 3 நாள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று உள்ளார். அவர் அசாம் முதல்-மந்திரி தருண் கோகாயை சந்தித்து, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்புக்காக கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.
பெங்களூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் துணை முதல்-மந்திரி அசோக் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர்கள் மீண்டும் பெங்களூர் திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment