மும்பை தாக்குதல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் தீவரவாதி அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து கசாபை விரைவில் தூக்கிலிடுமாறு பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் மார்க்கமாக இரவில் புகுந்த தீவிரவாதிகள் பத்து பேர் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர். 3 நாட்கள் நடந்த இந்த பயங்கர தீவிரவாத தாக்குதலால் இந்தியாவே அதிர்ந்து நின்றது. இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கசாப் உயர் நீதிமன்றத்தை அணுகினான். உயர் நீதிமன்றம் அவனது தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். அவனது மனுவை விசாரித்த உச்ச நீதிமனறம் அவனது தூக்கு தண்டனையை உறுதி செய்து இன்று தீர்பளித்தது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். கசாபுக்கு இதுவரை பிரியாணி கொடுத்தது போதும். அவனை விரைவில் தூக்கிலிட வேண்டும். அப்பாவி மக்களைக் கொல்பவர்களுக்கு இரக்கமே காட்டக் கூடாது என்றார்.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்க கசாப் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம் அல்லது ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கலாம். ஆனால் ஜனாதிபதி அவனது கருணை மனுவை நிராகரித்துவிட்டால் தூக்கில் இருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழியில்லை.
No comments:
Post a Comment