காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முந்தைய தி.மு.க. ஆட்சியை விட தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மின்தடை மோசமாக உள்ளது. 1967-க்கு பின் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-தி.மு.க. அரசுகளிடம் தொலை நோக்கு பார்வை இல்லை. மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாததே மின் தடைக்கு காரணம்.
அ.தி.மு.க. அரசு இலவச பொருட்களை வழங்குவதற்கு பதில் சீரான மின்சாரம் கிடைக்க செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். கிரானைட் குவாரி முறைகேடுகளை பொறுத்தவரையில் தவறு நடந்ததை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நடவடிக்கைகள் இருந்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படும்.
தி.மு.க. நடத்திய டெசோ மாநாடு தேவையில்லாதது. இலங்கையில் உள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே துன்பத்தில் உள்ளவர்களிடம் தனிஈழம் என கூறி திசை திருப்பி வாழ்வை குலைப்பது தவறான போக்கு. காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இக்கூட்டணி தொடருமா? என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க. அரசின் ஓராண்டுக்கும் மேலான ஆட்சியில் மின்சாரம், பால் கட்டண உயர்வு மக்களை மிகவும் பாதித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment