ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 கோடியில் 4 படுக்கையறை கொண்ட வீடுகள் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இன்று நாட்டினார்.
ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு மத்திய அரசு வீடு கட்டிக் கொடுக்கிறது. இந்த வீட்டை அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். டால்கடோரா ரோட்டில் 0.6 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அடிக்கல்லை நாட்டினார்.
7 மாடிக் கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் இரண்டு அபார்ட்மென்ட்கள் என மொத்தம் 14 அபார்ட்மென்ட்கள் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிலும் 4 படுக்கையறைகள் வரவேற்பறை, டைனிங் அறை மற்றும் சமையல் அறை இருக்கும். இந்த வளாகத்தில் வேலைக்காரர்கள் தங்க 28 குடியிருப்புகள், அமைச்சர்கள் மக்களை சந்திக்க ஒரு பெரிய அறை, ஜிம் ஆகியவை கட்டப்படும். எம்.பி.களுக்கான கட்டிடத்தில் ஜிம் வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கும். இந்த குடியிருப்பை கட்டி முடிக்க 16 மாதங்கள் ஆகும்.
No comments:
Post a Comment