லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்திய அணிக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது. வேறு எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத அளவுக்கு லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் சுசில்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். துப்பாக்கி சுடும் வீரர் ககன்நரங், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பாராட்டு மழையிலும், பரிசு மழையிலும் நனைந்தனர். பதக்கம் பெற்றதன் மூலம் இந்த 6 பேரும் தற்போது கோடீசுவர்களாகி விட்டார்கள். பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் பரிசு தொகைகளை வாரி வாரி அறிவித்தன.
கோடிக்கணக்கில் பரிசு தொகையை பெற்ற அவர்களுக்கு மேலும் பெருமை அளிக்கும் விதமாக வருமானவரி விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கிடைத்த வருமானத்தில் வருமானவரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment