குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்ததில் 58 கரசேவகர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடந்த கலவரங்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் மறுநாள் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. இதில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, முன்னாள் பெண் அமைச்சரும், நரோடா தொகுதி பாரதீய எம்.எல்.ஏ.வுமான மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட மொத்தம் 62 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. இவர்களில் 32 பேர் குற்றவாளிகள் என்றும், மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 32 பேரில் ஒருவர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது. முக்கிய குற்றவாளியான மாயா கோட்னானிக்கு 2 வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யஜ்னிக் தீர்ப்பு கூறினார்.
மேலும் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ஆயுள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இதேபோல் மற்ற 29 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment