இங்கிலாந்தில் தெருவில் வைத்து மன்மத லீலையை அரங்கேற்றியது ஒரு இளம் காதல் ஜோடி. இதை சிசிடிவி மூலம் பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அந்தக் காட்சியை தனது செல்போனில் டவுன்லோடு செய்து சிக்கி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
அந்த இளம் ஜோடியின் பெயர் கெவின் நாய்லர், 25 வயதாகிறது. இவரது காதலியின் பெயர் கேத்தரின் ஹியூக்ஸ். இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இவர்களது வீடு ஸ்குரூஸ்பரி என்ற ஊரில் உள்ளது. அந்த வீட்டுக்கு அருகே ஒரு பப் உள்ளது. அந்த பப்புக்கு சமீபத்தில் போயிருந்தனர் இருவரும்.
வீடு திரும்பும் வழியிலேயே இவர்களுக்குள் உறவுக்கான ஆசை உந்தித் தள்ளியது. தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. இதையடுத்து தெருவோரமாகவே ஒதுங்கிய இருவரும் உச்சகட்ட உறவில் இறங்கினர். சுற்றுவட்டாரம் குறித்த நினைவே இல்லாமல் இருவரும் காரியத்திலேயே கண்ணாக இருந்தனர்.
ஆனால் இவர்கள் உறவு கொண்டது தெருவில் பொருத்தப்பட்டிருந்த ரகசியக் கேமரா மூலம் அதை நிர்வகித்து வந்த கட்டுப்பாட்டு அறை போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரை உஷார்படுத்தினர். இந்த நிலையி்ல காதல் ஜோடி உறவு கொண்டிருந்ததை ரகசிய கேமராவில் பார்த்த கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் ஒருவருக்கு குயுக்தியாக வேலை செய்தது மூளை. உடனே தனது செல்போன் கேமரா மூலம் அந்தக் காட்சியைப் பதிவு செய்தார்.
இது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து உறவுக் காட்சியைப் பதிவு செய்த போலீஸ்காரரைக் கைது செய்தனர். உடனடியாக அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தெருவில் வைத்து உறவு கொண்ட நாய்லருக்கும், அவரது காதலிக்கும் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வீர்கள் என்று இருவரும் கண்டிக்கப்பட்டனர். அவருக்கு 9 மாத கால நிபபந்தனை விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவரது காதலிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இருவரும் மீண்டும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment