கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் ஸ்ரீகிருஷ்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. அதனை முன்னாள் டி.ஐ.பி. கிரண்பேடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய குடிமைப்பணி என்பது நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது. இப்பணியில் பின்னடைவு ஏற்பட்டாலோ, தவறு நடந்தாலோ நாட்டின் வளர்ச்சி பாதிக்கும், இந்தியாவில் உள்ள அரசுத் துறைக்கும் பொருள் உள்ளது. இத்துறைகளில் உள்ள ஒவ்வொரு கோப்பிலும் அரசின் கொள்கை அடங்கியுள்ளது.
எனவே இந்தியக்குடிமைப்பணியை வேலை வாய்ப்பாக கருதி மேற்கொள்ளக்கூடாது. ஏழை மக்கள், சமுதாயம், நாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடன் லட்சியத்திற்காக இப்பணியை மேற்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணியில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும்.
மாறாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணியை மேற்கொண்டால் அதில் பயன் இருக்காது. பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நாட்டில் இப்போதுள்ள தலைவர்கள் திறமையில்லாதவர்கள் என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் மனவலிமை இல்லாதவர்களாக உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பைக்கொண்டு வர பிரதான இரண்டு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இதில் இடம் பெற்றுள்ள ஆதரவாளர்களில் சிலர் இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
அவ்வாறு உருவாக்க நினைப்பவர்கள் அமைப்பில் இருந்து வெளியேறி தனியாக செயல்படலாம். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் இப்போது பிளவு ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment