விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போருக்கு பின் இலங்கை அரசுடன் சீனா நெருக்கமான உறவு வைத்துள்ளது. அந்த நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் பலாலி, காரைநகர், மன்னார், யானை இறவு, தல்லாடி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட இடங்களில் இலங்கை ராணுவம், விமானப்படை மற்றும் கப் பற்படை தளங்கள் உள்ளன.
இங்கு முகாம்களை அமைக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்கள் தங்குவதற்கு வீடுகளையும் சீனா கட்டித்தருகிறது. ராணுவ முகாம்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து விவாதிக்க சீன ராணுவ மந்திரி லியாங் குவாங்ஜி வருகிற 29-ந்தேதி இலங்கை வருகிறார். அப்போது உயர்மட்ட ராணுவ பிரதிநிதிகளின் கூட்டம் நடக்கிறது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து வருகிற செப்டம்பர் 15-ந்தேதி சீன மக்கள் காங்கிரசின் துணை தலைவர் யு பாங்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு வருகிறது.
அக்குழுவில் 96 சீன பிரதிநிதிகள் உள்ளனர். இலங்கை வரும் இவர்கள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நேரில் பார்வையிடுகின்றனர். ஏற்கனவே இலங்கைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி செலவில் சீனா 14 திட்டங்களை நிறைவேற்றி தந்துள் ளது. இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் பணி புரிபவர்களின் குழந்தைகள் படிக்க ரூ. 9 கோடி செலவில் பள்ளிக் கூடம் கட்டி கொடுத்துள்ளது. சீனாவிடம் இருந்து ரூ. 59 கோடி செலவில் எம்.ஏ. 60 ரக பயணிகள் விமானம் வாங்க இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவை விட 6 மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு சீனா செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கையுடன் நட்புறவை பலப்படுத்த சீனா விரும்புவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment