கேரளத்து பைங்கிளி சகானாவின் திருமண மோசடிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் பிரபல சினிமா தயாரிப்பாளரின் திருமண மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சித்த மருத்துவ டாக்டர் செல்வராஜா (55) என்ற பெயருடன் எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வரும் இவர் சினிமா தயாரிப்பாளரும் ஆவார். 'என் உள்ளம் உன்னை தேடுதே' என்ற சினிமாவை தயாரித்தார். இதில் நடிப்பு, டைரக்ஷன் எல்லாமே அவர் தான்.
இவரது மனைவி அன்னை ரீட்டா (24). இவரும் சித்த மருத்துவ டாக்டர். அன்னை ரீட்டா வடபழனி போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
செல்வராஜா தனது ஆஸ்பத்திரியில் வேலைக்கு டாக்டர் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். அதை பார்த்து வேலைக்கு சேர்ந்தேன். அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி என்னிடம் பழகினார். இதனால் அவரை நம்பி காதலித்தேன். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து கிளினிக் நடத்தி வந்தோம்.
நான் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளிப்பேன். இதனால் அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது. யாரோடு பேசினாலும் சந்தேக கண்ணோடு பார்க்க தொடங்கினார். வீட்டிற்குள்ளும், வெளியிலும் காமிரா பொருத்தி கண்காணித்தார்.
வீட்டிற்குள் தனி அறையில் அடைத்து 'செக்ஸ்' தொந்தரவும் கொடுத்தார். இதனால் எனக்கு அவரோடு வாழ பிடிக்கவில்லை. அவரோடு வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் நரகம் போல் ஆகிவிட்டது. எனவே நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவரால் எனக்கு தொந்தரவு ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருக்கிறார். முதல் மனைவி பெமிலா. அவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியில் வசித்து வருகிறார். 2-வதாக தேவிகா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அவர் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.
ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்துதான் என்னை ஏமாற்றி 3-வது மனைவியாக்கி இருக்கிறார். இப்போது 4-வதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். என்னோடு அவரது திருமண மோசடி வித்தைகள் முடிந்து போகட்டும். வேறு எந்த பெண்ணும் ஏமாந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி உள்ளார்.
வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குழலி அந்த புகார் மனு பற்றி ரகசியமாக விசாரணை நடத்தி வந்தார். போலீஸ் விசாரிப்பதை அறிந்ததும் செல்வராஜா எம்.ஜி.ஆர். நகர் போலீசில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் அனைத்து பொருட்களையும் அள்ளி சென்று விட்டனர்.
அதோடு எனது மனைவி அன்னை ரீட்டாவையும், மாமியாரையும் கடத்தி சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் அன்னை ரீட்டா வெளியேறி சென்றுள்ளார். செல்வராஜா கொடுத்திருப்பது பொய் புகார். அவரது 4-வது திருமணம் பற்றி விசாரித்து வருகிறோம். விசாரணையை பொறுத்து அடுதத கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment