19 வயதுக்குட்பட்டோருக்கான (ஜுனியர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா முன்னாள் சாம்பியனான இந்தியா அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி இ.எஸ்.பி.என். டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய அணி `லீக்' ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 63 ரன்னிலும், பப்புவா நியூ கியூனியா அணியை 107 ரன்னிலும் வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 4 விக்கெட்டில் தோற்றது. கால் இறுதியில் 1 விக்கெட்டில் பாகிஸ்தானையும், அரை இறுதியில் 9 ரன்னில் நியூசிலாந்தையும் தோற்கடித்தது.
இந்திய அணி 2 முறை ஜுனியர் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2000-ம் ஆண்டு முகமது கயூப் தலைமையிலும், 2008-ம் ஆண்டு வீராட் கோலி தலைமையிலும் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது உம்முகட் சந்த் தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக ஜுனியர் உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
2006-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்து 2-வது இடத்தை பிடித்தது. தற்போதைய இந்திய அணியில் சுமித் பட்டேல், சோப்ரா, விஜய் ஜோல், சென்னையை சேர்ந்த ஆல் ரவுண்டர் பி.அபராஜித், ரவிகாந்த்சிங், கமால்பாசி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருப்பதால் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. `லீக்' ஆட்டங்களில் இங்கிலாந்து, அயர்லாந்து, நேபாளம் அணிகளையும், கால்இறுதியில் வங்காள தேசத்தையும், அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவையும் வென்று இருந்தது. ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) ஜுனியர் உலக கோப்பையை வென்று உள்ளது.
தற்போது 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இன்று நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.

No comments:
Post a Comment