ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி இன்று மத்திய பிரதேச மாநிலம் சாத்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாபா ராம்தேவுக்கு ஆதரவு அளிக்கிறேன். ஆனால் அன்னா ஹசாரே குழுவில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது. ஒருவேளை எனது ஆதரவை அவர் விரும்பினால், தீவிரவாத எண்ணம் கொண்ட ஆதரவாளர்களின் உறவுகளை ஹசாரே துண்டிக்க வேண்டும்.
முதலில் லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கையிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையான லோக்பால் மசோதா வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது.
2ஜி முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரிய எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து விரைவில் மறு ஆய்வு மனு அளிப்பேன். மேலும் 2ஜி முறைகேட்டில் சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாக நான் கூறவில்லை. அவரால் நாட்டுக்கு இழப்பு என்றுதான் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment