செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த செந்தூரான் என்பவர் கடந்த 4-ந்தேதி பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
பூந்தமல்லி முகாமில் மொத்தம் 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். திறந்தவெளி முகாம்களில் அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செந்தூரான் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
உடல் நிலை மோசமானதால் அவரை மீட்டு போலீசார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் செந்தூரானுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் இருக்கும் செந்தூரானை வைகோ இன்று நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார். அவருடன் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், ஜீவன், செங்குட்டுவன், பூவை சங்கர் ஆகியோரும் உடன் சென்றனர்.
பின்னர் வைகோ கூறும்போது, செந்தூரானின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால் தமிழகம் அரசும் காவல்துறையும்தான் முழுப்பொறுப்பு. உடனடியாக அவரையும், சிறப்பு முகாம்களில் அடைபட்டு கிடக்கும் 47 ஈழ தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகம் முன்பு நான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறேன் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைக்கிறார். மாலையில் பழ.நெடுமாறன் முடித்து வைக்கிறார். 28-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment